முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச திட்டங்களை விட்டு விடுங்கள் என்று சொல்பவர்கள் சகல வசதியோடு வாழ்ந்து வருகின்றனர். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

திருவில்லிபுத்தூர், -  இலவச திட்டங்களை விட்டு விடுங்கள் என்று சொல்பவர்கள் சகல வசதியோடு வாழ்ந்து வருகின்றனர் என்றும் ஏழை எளிய மக்களுக்காகதான் அரசாங்கம் செயல்படும் என்றும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாளர் சமுதாயம் சார்பாக  பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு  விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும் அரசு தேர்வுகளில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கும் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அம்மா பேரவை வார்டு கழக செயலாளர் பிச்சைராஜ் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா முன்னிலை வகித்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே..டி..ராஜேந்திரபாலாஜி, கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது, குலாளர் சமுதாயத்திற்கு அதிமுக அரசு என்றும் உறுதுணையாக இருந்து வருகின்றது. அதே போன்று அதிமுக எப்போது தேர்தலை சந்தித்தாலும் குலாளர் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து மற்ற சமுதாய மக்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். குலாளர் சமுதாயம் பெரும்பாலும் உழைப்பாளிகளை அதிகம் கொண்டுள்ளது. தமிழகத்தில் செங்கல் தொழில் செய்ய குலாளர் சமுதாய மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். தற்போது செங்கலுக்கு தேவையாக மண் எடுக்க தனியாக பாஸ் கொடுக்கப்பட்டுள்ளதால் எந்தவித சிரமும் இன்றி குலாளர் சமுதாய மக்கள் செங்கல் உற்பத்தி செய்து வருகின்றனர். ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். ஏழை எளிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்தான் தமிழத்தில் தாமிரபரணி, பாலாறு, காவேரி ஆறுகளில் தண்ணீர் வெள்ளம்போல் ஓடுகின்றது. தமிழகத்தில் எங்கும் தண்ணீர் பற்றாக்குறை என்ற நிலைமை உருவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகளை அதிமுக ஆட்சியில்தான் தரம் உயர்த்தி கொடுத்துள்ளோம். திருவில்லிபுத்தூரில் செயல்படும் குலாளர் சமுதாய பள்ளி தரம் உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏராளமான விலையில்லா திட்டங்களை நிறைவேற்றினார். இலவசம் என்று சொல்லக்கூடாது என்பதற்காக விலையில்லா மிக்சி, விலையில்லா அரிசி, விலையில்லா கிரைண்டர், விலையில்லா பேன் என்று கூறினார். இலவசம் வேண்டாம் என்று சொன்னால் இன்றைக்கு பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு பஸ் பாசை நிறுத்தி வைக்க முடியுமா. விலையில்லாமல் கொடுக்கும் சைக்கிள், லேப்டாப் திட்டத்தை நிறுத்த முடியுமா. இன்று சைக்கிள் கொடுப்பதால் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் நகரில் வந்து படிக்க முடிகின்றது. வசதி படைத்தவர்கள் மட்டும் தமிழகத்தில் இருக்கின்றனர் என்று சொல்லிவிட முடியாது. தமிழகத்தில் இன்றும் 1கோடியே 80லட்சம் குடும்பம் விலையில்லா அரிசி வாங்கி சாப்பிட்டுதான் வருகின்றனர்.  ஊருக்கு நுழைவு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் மகளையும், மருமகனையும் வைத்து குண்டுமணி தங்கம் இல்லாமல் மஞ்சள் கயிறு கட்டி கண்ணீருடன் அனுப்பும் தாய் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் வாழ்வில் தாலிக்கு தங்கம் திருமண உதவித்தொகை கொடுத்து ஒளியேற்றியவர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்கு முடியாது. தமிழகம் பெரிய பொருளாதார வளர்ச்சியை இன்னும் எட்டவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களால் ஏழைகள் இன்றளவும் பசியாற சாப்பிட்டு வருகின்றனர். ஏழைகளை இழிவு படுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது செயல்படக்கூடாது. இலவச திட்டங்களை விட்டு விடுங்கள் என்று சொல்பவர்களுக்கு எல்லா வசதிகளும் இருக்கும் ஆனால் இலவச திட்டங்கள் இல்லை என்று சொன்னால் எத்தனை குடும்பங்கள் பசியோடு இருக்கும் என்று அவர்களுக்கு தெரியாது. 20கிலோ அரிசியை வாங்கி சாப்பிடும் குடும்பங்கள் இன்றளவும் இருகின்றனர். ஏழை எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு, பாட்டாளி, படைப்பாளிகளுக்காகதான் எங்களது அரசாங்கம் செயல்படுகின்றது. செங்கல் சூளையில் வெயில், மழையில் உழைக்கின்றவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகதான் இந்த அரசாங்கம் செயல்பட்டு கொண்டு இருகின்றது. ஒன்றறை மணி நேரம் ஓடும் திரைப்படத்தில் இலவச பொருட்களை தூக்கி வீசி எரிந்தால் கை தட்டலாம். பசி பட்டனியோடு வாழும் குடும்பங்களுக்கு அவர்களால் பதில்சொல்ல முடியாது. பணக்காரர்களுக்கு எங்களது அரசாங்கம் செயல்படவில்லை. ஏழைகளுக்குதான் எங்களது அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. ஒருநாள் முதல்வர் சினிமாவில் வேண்டுமானால் ரசித்து பார்க்கலாம். நடைமுறைக்கு ஒத்துவராது. சினிமா வேறு நடைமுறை வாழ்க்கை வேறு. ஒட்டிய வயிரையும் கிளிந்த சட்டையும் பார்த்துதான் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார். எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவு திட்டம் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. திரைப்படத்தில் நடிக்கும் போது எம்ஜிஆர் நல்ல கருத்துகளை கூறி நடித்தார். அதன்படி வாழ்ந்து காண்பித்தார். எல்லோறும் எம்ஜிஆர் ஆக ஆகிவிட முடியாது. புரட்சித்தலைவருக்கு என்று ஒரு கொள்கை உண்டு. எம்ஜிஆர் காலில் விழுந்து ஆசி பெற்றபிறகுதான் எனக்கு அரசியலில் வளர்ச்சி அடைந்தேன். இன்று சாதாரண, ஏழை எளிய மக்களுக்காக செயல்படும் முதல்வரை தமிழகம் பெற்றுள்ளது. உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள். உழைக்கும் மக்களுக்காக என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று பேசினார். நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், முன்னாள் கவுன்சிலர்  முத்தையா, கூட்டுறவு சங்க தலைவர் தங்கம், வழக்கறிஞர் செல்வராஜ் உட்பட கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து