முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரைகுறை ஆடையோடு மைதானத்தில் ஓடிய இங்கிலாந்து நபரை பிடிக்க முடியாமல் போலீஸ் தடுமாறி கீழே விழந்தனர் இலங்கையில் ருசிகர சம்பவம்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

கல்லே,இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முடிவின் போது வீரர்களை நோக்கி ஒருவர் அரைகுறை ஆடையோடு நடு மைதானத்தில் ஓடினார். அதனால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மைதான காவலர்கள் மற்றும் இலங்கை போலீஸ் அந்த நபரை பிடிக்க முடியமால் தடுமாறிய நகைச்சுவை சம்பவமும் நடந்தேறியது.

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் கடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெறாமல் இருந்து வந்தது. அதை தகர்த்தெறிந்து முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்த போட்டியைக் காண ஏராளமான இங்கிலாந்து நாட்டினர் இலங்கை வந்திருந்தனர். டெஸ்ட் போட்டி அதிக சுவாரஸ்யமின்றி இருந்த நிலையில், போட்டியில் இங்கிலாந்து வென்றது. அப்போது தான் மிகசுவாரஸ்யமான அந்த சம்பவம் நடந்தது. ஒரு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபர் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டுமைதானத்துக்குள் நுழைந்து ஓடினார். பத்து பேர் இருந்தும் பிடிக்க முடியவில்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு அருகே அவர் சென்ற நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை துரத்தத் துவங்கினர். அவர்களுக்கு செமையாக ஆட்டம் காட்டிய அந்த நபர், பவுண்டரி அருகே வந்த போது பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதனிடையே சில காவலர்கள் அவரை பிடிக்க முடியாமல் கீழே விழுந்தனர். டெஸ்ட் போட்டியை விட இந்த சம்பவம் மிக சுவாரஸ்யமானதாக இருந்ததால், இங்கிலாந்து ரசிகர்கள் இதை கை தட்டி ரசித்துக் கொண்டு இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து