முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் வழக்கு விசாரணை முடிவடைந்தது: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ரபேல் வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு, பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில், பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுக்களை கடந்த அக்டோபர் 31-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட், 36 ரபேல் விமானங்களின் விலை விவரங்களை, மூடிய உறையில் வைத்து சீலிட்டு 10 நாள்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. அத்துடன் ரபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது தொடர்பான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு ரபேல் விமானங்களின் விலை விவரங்களை மூடிய உறையில் வைத்து சீலிட்டு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த திங்களன்று சமர்ப்பித்தது.

இந்நிலையில் இந்த வழக்கானது திங்களன்று விசாரணைக்கு வந்த போது விமானப்படை உயர் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. அதன்படி அதிகாரிகளும் நேரில் ஆஜராகினர். பின்னர் இரு தரப்பு விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று, விசாரணை முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் சுப்ரீ்ம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து