முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்த நடிகர் அம்பரீஷ் உடலுக்கு ரஜினி, கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அம்பரீஷ் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 66. கன்னட நடிகர் அம்பரீஷ் வீட்டில் இருக்கும் போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

நடிகர் அம்பரீஷ்க்கு மனைவி (நடிகை) சுமலதா மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  அம்பரீஷ், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராவார். இருவரும் 1978-இல் வெளியான பிரியா படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அரசியலிலும் நடிகர் அம்பரீஷ் தனி முத்திரை பதித்துள்ளார். எம்.எல்.ஏ.வாகவும், மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். ஜனதா தளம் கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, அதன்பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அம்பரீஷ். மண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் 2013 முதல் 2016 வரை வீட்டுவசதி துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

கடந்த 2006-07-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சராக நடிகர் அம்பரீஷ் இருந்தார். காவேரி பிரச்சினை காரணமாக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் வருத்தமும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து