நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்! நைஜீரிய அதிபரின் வைரலாகும் வீடியோ

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      உலகம்
Nigeria President 2018 12 03

அபுஜா, நைஜீரியா அதிபர் முகமது புஹாரி, தான் இன்னும் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன் என்று பேட்டியளித்துள்ளார்.

நைஜீரியா அதிபர் முகமது புஹாரி இப்போது உயிரோடு இல்லை. அவருக்கு பதிலாக அவரைப் போலவே இருக்கும் டபுள்தான் ஆட்சி செய்து வருகிறார் என்று பரபரப்பு செய்தி கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. நைஜீரியா அதிபர் முகமது புஹாரி கடந்த மே மாதம் பிரிட்டன் சென்றார். 75 வயதாகும் இவர், அங்கு மருத்துவ சிகிக்ச்சை பெற்று வருகிறார். அங்குதான் இவர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இவர் இறந்து விட்டார் என்று கடந்த மூன்று மாதமாக செய்திகள் வந்தது. சிகிச்சை காரணமாக அங்கு சென்றவர் இறந்து விட்டார். பாதுகாப்பு கருதி இதை சொல்லவில்லை என்று மக்கள் நைஜீரியாவில் பேசி வருகிறார்கள். இதற்காக வீடியோவும் கூட வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் சூடானை சேர்ந்த மதகுருவான ஜூப்ரில் என்பவர்தான் தற்போது புஹாரி இடத்தில் இருப்பது. இருவரும் பார்க்க ஒன்று போல இருப்பார்கள். இதனால் ஜூப்ரீல் பாடி டபுளாக பயன்படுத்தப்படுகிறார் என்று அந்நாட்டு மக்கள் புகைப்படங்களுடன் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் சிகிச்சைக்கு இடையில் இந்த வதந்திக்கு புஹாரி முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். இதுகுறித்து அந்நாட்டு செய்தி சேனல்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில், கடவுளே நான் இன்னும் சாகவில்லை. என்னை யாரும் கொல்லவும் இல்லை. எனக்கு பாடி டபுளும் இல்லை. நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் 76 வயது பிறந்த நாளை கொண்டாடுவேன் என்று கூறி இருக்கிறார். அவரது இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து