உ.பி. முதல்வர் யோகியை விமர்சித்த சித்து தலைக்கு ரூ.1 கோடி பரிசு - இந்து அமைப்பு அறிவிப்பால் சர்ச்சை

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018      இந்தியா
Navjot Singh Sidhu 2018 9 13

ஆக்ரா : உ.பி. முதல்வரை விமர்சித்த சித்துவின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று இந்து அமைப்பு அறிவித்துள்ளது.

விமர்சன பேச்சு

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்ய சென்றிருந்த பஞ்சாப் மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து ராம் கஞ்ச் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர்,  பிரதமர் மோடியையும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசினார்.

கொடும்பாவி எரிப்பு

சித்துவின் பேச்சு உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் ஆதரவாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சித்துவின் கொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் இயங்கும் இந்து யுவ வாகினி எனும் இந்து அமைப்பு சித்துவுக்கு எதிராக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

நானே வெட்டுவேன்

சித்துவின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த இந்து அமைப்பின் ஆக்ரா நகர செயலாளர் தருண்சிங் கூறுகையில், சித்து ஆக்ராவுக்கு வந்தால் அவர் தலையை நானே வெட்டுவேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து