ரணிலுக்கு ஆதரவாக அடுத்த வாரம் இலங்கையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2018      உலகம்
Ranil Wickramasinghe 05-11-2018

கொழும்பு, இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அதிகாரிகள் கூறுகையில்,

இலங்கை நாடாளுமன்றம், வரும் 12-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம், அவை அலுவல்கள் முடிவு செய்யப்படும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் தேதி முடிவு செய்யப்படவில்லை. ஒருவேளை 12-ம் தேதியே கூட நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்றனர். இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் 7 நாள்களில் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து