முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவரான மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜிநாமா

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, இன்று நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாகா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து கடந்த 2013-ம் ஆண்டு விலகிய உபேந்திர குஷ்வாகா, தனிக் கட்சி தொடங்கி பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். இதனிடையே கடந்த மாதம் அக்டோபர் மாதம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவை உபேந்திர குஷ்வாகா சந்தித்தார்.

இதனால், அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பாரா? என்பது தொடர்பாக யூகங்கள் வெளியாகின. ஆனால், எனது கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நீடிக்கிறது. அடுத்த முறையும் பிரதமராக மோடியே வர வேண்டும் என்பதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறேன் என்று உபேந்திர குஷ்வாகா தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாகா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும் ஜனநாயக கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். உபேந்திர குஷ்வாகாவின் அறிவிப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து