முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாக்கி: இந்தியா காலிறுதியில் நெதர்லாந்துடன் மோதுகிறது?

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. மன்பிரித்சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் 2-2 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதன் மூலம் 7 புள்ளிகளுடன் கோல்கள் அடிப்படையில் இந்தியா கால்இறுதிக்கு தகுதி பெற்றது.இதேபோல அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. மீதியுள்ள 4 அணிகள் 2-வது சுற்று மூலம் நுழையும்.

கிராஸ் ஓவர் என்று அழைக்கப்படும் 2-வது சுற்றில் பிரான்ஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, சீனா, பெல்ஜியம், கனடா, நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. ஸ்பெயின், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா அணிகள் வெளியேற்றப்பட்டன.

2-வது சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து- நியூசிலாந்து. பிரான்ஸ், சீனா அணிகளும், நாளை நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம்- பாகிஸ்தான், நெதர்லாந்து, - கனடா அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்து- கனடா மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த ஆட்டம் 13-ந்தேதி நடக்கிறது. நெதர்லாந்து அணி பலம் பொருந்தியவை என்பதால் அந்த அணி வெற்றி பெறலாம். இதனால் இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்துடன் மோத அதிகமான வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து