முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஸ்ரீ சம்பக சஷ்டி பெருவிழா

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி.- பரமக்குடியில் ஸ்ரீ சம்பக சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஸ்ரீ பைரவர் சந்தன  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 பரமக்குடி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஸ்ரீ சம்பக சஷ்டிப் பெருவிழா, கடந்த 7 ம்தேதி முதல் 14 ம்தேதி வரை நடந்தது. பரமக்குடி ஸ்ரீ பைரவர் அஷ்டமி விழாக் குழுவினர் சார்பில் நடந்த இவ்விழா கடந்த 7 ம்தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பைரவர் விபூதி காப்பு சாத்தப்பட்டு சஹஸ்கரநாம அர்ச்சனை தீபாரதணைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.
 தொடர்ந்து தினமும் ஸ்ரீ பைரவர் பச்சை சாத்தி, சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி வெண்ணெய் காப்பு சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று காலை ஸ்ரீ சம்பக சஷ்டி ஓம் அதி சந்துஷ்ட பைரவ யாகம் தொடங்கியது.
 இந் நிகழ்ச்சியில் பரமக்குடி ஆயிர வைசிய சபை தலைவர் பால்ச்சாமி மற்றும் நிர்வாகிகள், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தேவஸ்தான அறங்காவல் குழுவினர், பரமக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து ஸ்ரீ பைரவருக்கு விசேஷ அபிசேக தீபாரதணைகள் நடந்தன.
பின்பு மாலை ஸ்ரீ பைரவர் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 தொடர்ந்து 14 ம்தேதி ஸ்ரீ பைரவர் விசேஷ தீபாரதணைக்குப் பின்பு வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.அன்னதான நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
 இதற்கான ஏற்பாடுகளை பரமக்குடி ஆயிர வைசிய சபை, கோவிலின் அறங்காவலலர் குழுவினர், ஸ்ரீ பைரவர் அஷ்டமி விழாக் குழுவினர் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து