முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.2.98கோடி மதிப்பீட்டில் கவுண்டாநதியை புனரமைக்கும் பணிகள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் 1194 ஏக்கர் பாசன வசதி பெற்றிடும் வகையில் சௌடார்பட்டி அணைக்கட்டு முதல் திரளி அணைக்கட்டு வரை ரூ.2.98கோடி மதிப்பீட்டில் கவுண்டாநதியை புனரமைத்திடும் திட்டத்திற்கான பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
குண்டாறு நதியானது மதுரை மாவட்டம் சாப்டூர் வனத்தின் வருசநாட்டு மலைப்பகுதியின் கிழக்கே ஆரம்பமாகி கவுண்டாநதி என்ற பெயரில் திருமங்கலம் வட்டம் சௌடார்பட்டி அணைக்கட்டு முதல் சுமார் 30மீட்டர் அகலமுள்ள ஓடையாகவும்,அதன்பின்னர் சுமார் 60 முதல் 120 மீட்டர் அகலத்துடன் தென்மேற்காகச் சென்று வரட்டாறு நதியுடன் இணைகிறது. அதனை தொடர்ந்து காரியாபட்டி வட்டம் பி.புதுப்பட்டி அருகே தெற்காறுடன் இணைந்த பின் குண்டாறு என்று அழைக்கப்படுகிறது.இதனிடையே கவுண்டநதியை சௌடார்பட்டி அணைக்கட்டு முதல் திரளி அணைக்கட்டு வரை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் பொதுப்பணித் துறை மூலம் ரூ.2.98கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுஇந்த திட்டத்தின் கீழ் கவுண்டாநதியை சௌடார்பட்டி அணைக்கட்டிலிருந்து திரளி அணைக்கட்டு வரை சுமார் 9.10 கி.மீ நீளத்திற்கு முட்புதர்களை அகற்றி இயந்திரங்கள் மூலம் ஆற்றுப்படுகையில் படிந்துள்ள மண்மேடுகளை அகற்றி,மேடு பள்ளங்களை ஆற்றின் படுகை மட்டத்திற்கு சமன்படுத்தி இருபுறமும் கரைகள் அமைத்து புனரமைத்திட திட்டமிடப்படுள்ளது.
மேலும் சிறு ஓடைகள் ஆற்றில் கலக்கும் இடங்களில் அரிமானங்களை தடுக்க உரிய சுவர்களும்,ஆக்கிரமிப்புகளை தடுத்திடும் பொருட்டு நில அளவை செய்து எல்லை கற்கள் நடவும் திட்டமிடப்படுள்ளதுடன் கவுண்டாநதியின் ஆற்றின் குறுக்கே சௌடார்பட்டி அணைக்கட்டினை புனரமைத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சௌடார்பட்டி,கிழவனேரிதங்களாச்சேரி,திரளி(பெரிய) உள்ளிட்ட கண்மாய்களின் மூலம் சுமார் 1194 ஏக்கர் நிலம் பாசனவசதி உறுதி செய்யப்பட்டு விவசாய உற்பத்தி அதிகரித்து திருமங்கலம் வட்டத்திலுள்ள சௌடார்பட்டி தங்களாச்சேரி,கிழவனேரி,மீனாட்சிபுரம்பொன்னம்பட்டி,நடுவக்கோட்டை மற்றும் திரளி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்றிடுவார்கள்.மேலும் இந்த பகுதியில் நிலத்தடிமட்டம் வெகுவாக உயர்ந்து பொதுமக்களின் குடிநீர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறது.
அதன்படி திருமங்கலம் வட்டத்தில் சௌடார்பட்டி அணைக்கட்டு முதல்திரளி அணைக்கட்டு வரை கவுண்டாநதியை ரூ.2.98கோடி மதிப்பீட்டில் புனரமைத்திடும் திட்டத்திற்கான பூமிபூஜை விழா நடுவக்கோட்டை பகுதி கவுண்டாநதி அணைக்கட்டு பகுதியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமை வகித்தார்.பொதுப்பணித்துறையின் குண்டாறு வடிநில மேம்பாடு செயற்பொறியாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தார்.உதவி செயற் பொறியாளர் லீலாவதி வரவேற்றார்.ஏராளமான விவசாய பெருமக்களும்,பொதுமக்களும் கலந்து கொண்ட இந்த பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ரூ.2.98கோடி மதிப்பீட்டில் திருமங்கலம் வட்டத்தில் 1194 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிடும் வகையில் கவுண்டாநதியை புனரமைத்திடும் பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் நடுவக்கோட்டை ஆற்றுப்பகுதியில் புனரமைப்பு பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதையடுத்து விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: சாப்டூர் வனப்பகுதியிலிருந்து சௌடார்பட்டி வரையில் 34 கி.மீ தூரமும், ஏறத்தாழ 100கிமீ முன்பாக உருவான காட்டாறு ஆகும்.இது வரும் பகுதியில் மரம்,செடி,கொடி இருந்ததால் நீர்வரத்து முழுமையாக உள்வாங்குவதில் சிரமம் இருந்தது.இதையும் தாண்டி வரும்நீர்வரத்து ஆங்காங்கே வெளியேறிச் சென்றிடும் வகையில் விவசாயிகளுக்கு பயன்தராத வகையில் இருந்தது.இதனை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு பொதுப்பணித் துறை பொறியாளர்கள் லீலாவதி,விஸ்வநாத் ஆகியோர்  கொண்டு சென்றதன் பேரில் இந்த கவுண்டாநதியை புனரமைத்திடும் திட்டம் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.தற்போது சௌடார்பட்டி முதல் திரளி வரை ரூ.2.98கோடி செலவிலும்,அரசபட்டி முதல் குராயூர் வரையிலும் பின்னர் சென்னம்பட்டி வரையிலும் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளது.தற்போது அரசபட்டி முதல் குராயூர் வரையிலான திட்டமதிப்பீடு தயார் நிலையில் உள்ளது.இதனால் சாப்டூர் வனப்பகுதியில் நமக்கு என்ன நீர்வரத்து கிடைக்கிறதோ அதனை முழுமையாக இந்த பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு பயன்படுத்திட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்றைக்கு தண்ணீரின் அவசியத்தை நாம் முழுமையாக உணர்ந்து இருக்கிறோம்.அதனால் தான் மன்னராட்சி காலத்தில் இருந்த குடிமராமத்து திட்டத்தினை நாம் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறோம்.தற்போது முதல்வர் வெளியிட்டுள்ள அரசாணையில், 6மாத காலத்திற்கு எந்தெந்த அரசுநிலங்களில் ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கிறதோ அதற்கெல்லாம் பட்டா வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இவற்றில் ஆட்சேபகரமான புறம்போக்கில் இருந்தால் அதற்கு பதிலாக பட்டா இல்லாமல் தனியார் நிலங்களை கொள்முதல் செய்து அந்த நிலங்களில் அடுக்கு மாடி வீடுகள் கட்டி  கொடுக்கக்கூடிய உத்தரவையும் முதல்வர் தந்துள்ளார்.யாரெல்லாம் அரசு நிலங்களில் 5ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்புகளை கட்டி குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுக்கும் சூழலை முதல்வர் உருவாக்கி தந்துள்ளார்.இருப்பினும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு மட்டும் தனியாக அடுக்குமாடி குடியிருப்பகள் கட்டித் தந்திடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.இந்த திட்டத்தின் மூலம் நாம் வாழ்ந்திடும் இந்த பூமியில் சொந்தமாக ஒருபிடி மண் இல்லையே என்று ஏங்கித் தவித்திடும் நிலையை மாற்றி அரசே முன்வந்து அரசு நிலத்தை பட்டா போட்டு வழங்கிடும் ஒரு கனிவானஅரசு அம்மாவுடைய அரசு என்பது இந்த அரசாணையின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்று பேசினார்.
இவ்விழாவில் திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ரவிகுமார்,குணசேகரன்,ராமச்சந்திரன்,மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிஅணிச் செயலாளர் திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றியச் செயலாளர் உலகாணி மகாலிங்கம்,திருமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,கட்சி நிர்வாகிகள் சரவணன்,முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,கோடீஸ்வரன்,ஜெயமணி,செல்வம்,ஆறுமுகம்,வேல்ராமகிருஷ்ணன்,மாரிச்சாமி,கண்ணன்,செல்வம்,போதுராமன்,சக்தி,விஜி,போதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து