முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளக்குகளால் அலங்கரித்து பார்வையாளர்களை அசத்தும் சிகாகோ விலங்கியல் பூங்கா

செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

சிகாகோ, சிகாகோ நகரில் ஒரு விலங்கியல் பூங்காவை விடுமுறை கொண்டாட்டத்திற்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் விளக்குகளால் அலங்கரித்து அசத்துகிறார்கள். இந்த கொண்டாட்டம் நடப்பது விலங்கியல் பூங்கா என்பதால் விளக்கு வடிவில் எல்லா விலங்குகளையும் பார்க்க முடியும்.

விலங்குகள் மட்டுமின்றி பறவைகள், மீன்கள், டால்பின், நண்டு, ஆமை,ஜெல்லி பிஷ் என்று அவர்கள் ஏற்படுத்திய விளக்கு ஒளியின் பிம்பத்தை தண்ணீரில் காண்பதே ஒரு அலாதி.  அதுமட்டுமல்லாது, ஐஸ் கார்விங் எனப்படும் ஐஸ் கட்டியில் அழகு அழகாய் உருவங்கள் செய்து கலைஞர்கள் அசத்தும் காட்சியும் உண்டு. இந்த விலங்கியல் பூங்காவிற்கு செல்ல அனுமதி இலவசம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து