முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் சுவாமி ஸ்ரீஅய்யப்பன் மண்டல பூஜையை முன்னிட்டு திருத்தேர் பவனி _அன்னதானம்

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் சுவாமி ஸ்ரீஅய்யப்பன் மண்டல பூஜையை முன்னிட்டு மற்றும் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற அன்னதானம் நடைபெற்றது.
திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் மிக பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இங்கு கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தைத் தொடங்கினர். திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் நாள்தோறும் சிறப்பு பூஜை, பஜனை. அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீசுவாமி அய்யப்பனின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை மகாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது. ஸ்ரீசக்தி விநாயகர் லாரி சர்வீஸ் அதிபர் சக்திவேல் தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார். மதியம் 12 மணியளவில் சுவாமி அய்யப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் பங்கேற்று மனமார உணவருந்தி சென்றனர். விழாவின் 2ம் நாள் நிகழ்வான திருத்தேர் பவனி நடைபெற்றது.
தொழிலதிபர்கள் ஜி.சுந்தர்ராஜன், எஸ்.கே.சீஸ் குப்புசாமி ஆகியோர் தலைமை வகித்து தேர்பவனியை தொடங்கி வைத்தனர். முன்னதான ஸ்ரீசுவாமி அய்யப்பன் மற்றும் ஸ்ரீகணபதிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அய்யப்பனும், சுவாமி கணபதியும் ரீங்காரமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். வாணவேடிக்கை முழங்க திருத்தேர் பவனி காந்தி மார்க்கெட், மேற்குரதவீதி, பழனி ரோடு, 108 விநாயகர் கோவில் சாலை, சத்திரம் தெரு, கிழக்கு ரதவீதி, தெற்குரதவீதி, மாரியம்மன் கோவில் வழியாக திருக்கோவிலை வந்தடைந்தது.
வழியெங்கும் பக்தர்கள் காணிக்கையாக பூக்களை வழங்கி சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை மலையடிவாரம் ஸ்ரீஅய்யப்ப பக்தர்கள் சங்க தலைவர் ஜி.லட்சுமணன், செயலாளர் சந்தானகிருஷ்ணன், துணைத்தலைவர் தொந்திலிங்கம், இணை செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் ரவீந்திரன், கோவில் திருமேணி பிரகாஷ், குருநாதர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் திறம்பட செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து