முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் டாப்கிளாஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை - ஆஸி. கேப்டன் பெய்ன் ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : மெல்போர்ன் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அணியில் அனுபவம் மிகுந்த வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாத வெற்றிடத்தை நாங்கள் உணர்கிறோம். இப்போது அனுபவமற்ற அணியாக நாங்கள் இருக்கிறோம். இதனால் எங்களுக்குப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கிறது.  இந்தியாவின் டாப்கிளாஸ் பந்து வீச்சை நாங்கள் எதிர்கொள்வதில் தோல்வி அடைந்து விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பலரின் பந்துவீச்சை இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்கொண்டதில்லை.

உலகின் சிறந்த வீரர்கள் எனப் பட்டியலிட்டு அதில் 3 வீரர்களைத் தேர்வு செய்தால் கூட நிலைத்தன்மை இல்லாவிட்டால், அவர்கள் அனைத்து ஆடுகளங்களிலும் பேட் செய்ய திணறத்தான் செய்வார்கள். பெர்த் ஆடுகளம் பேட் செய்வதற்கு கடினமாக இருந்தது. அங்கு உண்மையில் ஆடுகளத்தில் பிளவுகள் இருந்தன. ஆனால், இந்தப் போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் சிறிது வேதனை அளிக்கிறது. இது போன்று அடிக்கடி நடக்கிறது. இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறி வருகிறோம். கடந்த 2 போட்டிகளில் செய்த தவறுகளை இந்தப் போட்டியில் செய்யாமல் தவிர்த்திருக்கிறோம்.

ஆனால், இந்திய அணி போன்ற டாப் கிளாஸ் பந்துவீச்சு இருக்கும் இடத்தில், அனுபவமில்லாத எங்களின் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது சிரமமே. இன்னும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போதுதான் வீரர்கள் அனுபவத்தைப் பெற முடியும் என்று நினைக்கிறேன்.  இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு எந்தவிதமான குறைசொல்லமுடியாத அளவுக்குத் துல்லியமாக இருந்ததால்தான் விக்கெட்டுகளை இழந்தோம். எங்களால் ரன்களைக் குவிப்பதும் கடினமாக இருந்தது. சரியான தொடக்கத்தை அளிக்க முடியாமல் போனது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக பேட் செய்தனர். அப்போது இருந்தே நாங்கள் பின்னடைவைச் சந்தித்தோம். ஆடுகளத்தைப் பார்த்தவுடன் இது மோசாக இருக்கிறது என்பதை உணர்ந்தோம். அதற்கு ஏற்றார்போல், இந்திய அணியின் துல்லியமான வேகப்பந்துவீச்சுக்கு எதிராகப் போராடினோம்.  ஒட்டு மொத்தமாகக் கூறினால் எங்களை வெளியேற்றி விட்டார்கள். வெற்றிக்குத் தகுதியானவர்களாக மாறி விட்டனர் இந்திய அணியினர். புகழ் அனைத்தும் இந்திய அணிக்குத்தான். இவ்வாறு பெய்ன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து