முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தது இந்தியா

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

3-வது டெஸ்டில்...

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதலிடத்தை...

இந்நிலையில், டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகள் பெற்று முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 108 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 3-வது இடத்தில் நியூசிலாந்தும், 4-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 5-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் இடம்பிடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து