டெஸ்ட் போட்டியில் 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 270 ரன்களை குவித்த பிராட்மேன்

சனிக்கிழமை, 5 ஜனவரி 2019      விளையாட்டு
Don Bradman 2019 01 05

மெல்போர்ன் : டெஸ்ட் போட்டியில் 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 270 ரன்களை குவித்த பிராட்மேன் சாதனையை இன்றளவும் முறியடிக்கப்படவில்லை. இவர் படைத்த

சாதனை தினம் ஜன. 04.

கிரிக்கெட் சரித்திரத்தில் யாரும் ஈடு செய்ய முடியாத ஒரு சாதனை மனிதன் டான் பிராட்மேன் என்றால் அதற்கு யாரும் மறுப்புத் தெரிவிக்க முடியாது. 1908 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர், தனது 11 வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதன் விளைவு, தனக்கு 20 வயது நிரம்பிய போது, இங்கிலாந்திற்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியில் 1928ஆம் ஆண்டு விளையாடினார். அன்று தொடங்கிய அவரது ஆட்டம் 1948ஆம் ஆண்டு ஓய்ந்தது. இந்த 20 வருடங்களில் அவர் படைத்த சாதனைகள் எண்ணற்றவை.

இவர் குறித்த 10 சுவாரஸ்யங்கள் :

1. தனது 10 வயது வரை டான் பிராட்மேன் டென்னிஸ் விளையாட்டின் மீது காதலாக இருந்தார்.
2. பிராட்மேனின் அறிமுகம் மற்றும் கடைசி போட்டி இரண்டும் இங்கிலாந்திற்கு எதிரானது தான்.
3. பிராட்மேன் ஓய்வு பெறும் வரை அவரது டெஸ்ட் ரன்ரேட் 99.94 ஆக இருந்தது. இதுவரை உலகில் எந்த பேட்ஸ்மேனும் இதை தொட்டதில்லை.
4. டெஸ்ட் போட்டியில் 12 இரட்டை சதம் மற்றும் 2 முறை 300 ரன்களை கடந்துள்ளார். இதையும் யாரும் முறியடிக்கவில்லை.
5. ஆஸ்திரேலிய ஒளிபரப்புக் கழகம் தனது ஜிபிஓ பதவிட்டு எண்ணை 9994 ஆக தேர்வு செய்து, இதுவரை மாற்றாமல் வைத்துள்ளது. இந்த எண் பிராட்மேனின் ரன் ரேட்டான 99.94 (9994) ஐ குறிக்கும்.
6. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ரசிகர்களில் பலர் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டிக்கின்றனர்.
7. ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேஸர் ஒருமுறை ‘ஆப்பிரிக்க காந்தி’ நெல்சன் மண்டேலாவை சந்திதுள்ளார். அப்போது மண்டேலா, உண்மையில் பிராட்மேன் உயிருடன் இருக்கிறாரா? என ஃப்ரேஸரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
8. பிராட்மேனை பெருமைப்படுத்த ஆஸ்திரேலிய அரசு, அவர் புகைப்படத்துடன் தபால் முத்திரை வெளியிட்டுள்ளது.
9. 2008ஆம் ஆண்டு பிராட்மேன் நூற்றாண்டு விழாவிற்கு 5 டாலர் மதிப்புடை தங்க நாணயத்தை ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டது.
10. டெஸ்ட் போட்டியில் 7வது ஆட்டக்கரராக களமிறங்கி 270 (375) ரன்களை குவித்தார். இந்தச் சாதனையும் முறியடிக்கப்படவில்லை. இந்த சாதனையை அவர் படைத்தது 1937ஆம் ஆண்டு ஜனவரி 4-ல் தான்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து