முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் வாகனங்கள் மோதி விபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடாவில் இரண்டு லாரிகள் வேன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் லூசியானாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து டிஸ்னி வேர்ல்டு பகுதிக்கு குழந்தைகளை ஒரு வேனில் சுற்றுலா அழைத்துச் சென்றனர். அந்த வேன் கென்ஸ் வில்லே என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது அதி வேகமாக வந்த இரண்டு லாரிகள் பயங்கரமாக மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் அவை குழந்தைகள் சென்ற வேனில் மோதின. இதனால் நொறுங்கிய வேன் ரோட்டில் கவிழ்ந்தது. அதன் மீது மேலும் 2 வாகனங்கள் மோதின. இதனால் வேன் தீப்பிடித்து எரிந்தது. அதில் வேனில் இருந்த 5 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். அவர்கள் 9 முதல் 14 வயதினர் ஆவர். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வேன் மீது மோதிய லாரிகளின் டிரைவர்கள் 2 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து