முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கில் பாக். முன்னாள் அதிபர் சர்தாரி சொத்துக்கள் முடக்கம்

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஊழல் வழக்கில் சிக்கியதையடுத்து அவரது சொத்துக்களை முடக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. பதவி வகித்த போது ரூ.22 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஒரு விசாரணை குழு அமைத்தது.அந்த குழு சர்தாரி, அவரது சகோதரி பர்யால் தர்புர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.

அதுகுறித்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி சர்தாரி, அவரது தங்கை பர்யால் தர்பூர் மற்றும் சர்தாரி குரூப் சொத்துக்களை முடக்க பரிந்துரை செய்துள்ளது. அவற்றில், சர்தாரி, பெயரில் உள்ள வங்கி கணக்குகள், கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற பிலாவல் ஹவுசுக்கு சொந்தமான 5 பிளாட்டுகள், அமெரிக்கா மற்றும் துபாயில் உள்ள சொத்துக்கள் அடங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து