முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுப்பிரிவினரில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் - மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதுவரை நாடு முழுக்க 49.5 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது (தமிழகம் தவிர்த்து). இந்த நிலையில் கூடுதலாக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதன்மூலம் பொதுப்பிரிவனரில் மொத்தம் 19 கோடி பேர் பலன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதம் நடைப்பெற்றது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதராவாக 323 உறுப்பினர்கள் வாக்களிளித்தனர். இத்துடன் மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.

இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறஉள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து