முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடநாடு விவகாரம்: முதல்வர் மீது அவதூறு கூறிய தெகல்கா முன்னாள் ஆசிரியரை பிடிக்க டெல்லி விரைந்த தனிப்படை வழக்கில் தொடர்புடைய சயன், வாலையார் மனோஜ் பிடிபட்டனர்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கொடநாடு சம்பவங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய ஆவணப்படம் வெளியிட்ட தெகல்கா இதழ் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர். இந்நிலையில் பேட்டி கொடுத்த சயன் மற்றும் வழக்கில் தொடர்புடைய வாலையார் மனோஜ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் இறந்து போனார். கொடநாடு கொள்ளை விவகாரத்தில் மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன், தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் பாலக்காடு மாவட்டம் கண்ணடி அருகே சென்ற போது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பினார். கொடநாடு எஸ்டேட்டின் சி.சி.டி.வி. பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம், சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அவதூறாக குற்றச்சாட்டு கூறினார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் கொடநாடு வீடியோ விவகாரத்தில் மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கை பதிவு செய்துள்ளனர். ஆவணப்படத்தில் பேட்டியளித்த வாலையார் மனோஜ், சயன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடநாடு விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ், பேட்டி கொடுத்த சயன் உள்ளிட்டோர் மீது சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேத்யூசை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி சென்றுள்ளனர். இதனிடையே இந்த விவகாரத்தில் தொடர்புடைய சயன் மற்றும் வாலையார் மனோஜ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து