முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது தேனியில் கழக அம்மா பேரவை இணை செயலாளர் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம், போடிநாயக்கனுர் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டியில்  கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.டி.கணேசன் தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் தீபன்சக்கரவர்த்தி வரவேற்றார்.; ஒன்றிய கழக செயலாளர்கள் போடி சற்குணம், சின்னமனூர் விமலேஷ்வரன், போடி நகர செயலாளர் பழனிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், கழக அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என் கண்ணன், தலைமை கழக பேச்சாளர் அனுமோகன் உள்ளிட்டோர்  சிறப்புரையாற்றினர்.
 கழக அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் பேசும்போது   பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றால், எழுத்தாற்றலால் கவரப்பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அண்ணாவின் இதையக்கனியாகி அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பட்டி தொட்டியெல்லாம் சென்று ஆதரவு திரட்டினார். அதன் விளைவாக 1967ல் தி.மு.க  ஆட்சியை பிடித்தது. 1969ல் பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின் திமுகவின் தலைமை பொறுப்பை ஏற்ற கருணாநிதி மக்களிடத்தில் பெரும் செல்லவாக்கோடு திகழ்ந்த புரட்சித்தலைவரை சூழ்ச்சி செய்து  கட்சியிலிருந்து நீக்கினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ல் அதிமுகவை உருவாக்கினார். 1977ல் மக்களின் பேராதரவோடு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றினார். மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தினார். அவர் இறுதி காலம் வரை முதல்வராகவே இருந்தார். புரட்சித்தலைவரின் மறைவுக்கு பின் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு சோதனைகளை கடந்து  கழகத்தை எஃகு கோட்டையாக மாற்றினார். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று கழகத்தை ஆட்சி கட்டிலில் ஏற்றி, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார். புரட்சித்தலைவியின் மறைவுக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரட்டைகுழல் துப்பாக்கியாக இருந்து  கழகத்தையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். கழக ஆட்சி மீது எந்த குறையும் சொல்ல முடியாத மு.க.ஸ்டாலின் முதல்வர் மீதும், துணை முதல்வர் மீதும் தவறான பொய்மூட்டைகளை அவிழ்;த்து விடுகிறார்.  கழக ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகள் நூறு சதவிகிதம் நிறைவேற்றப்பட்டு, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. கழகத்திற்கு தமிழக மக்கள் தொடர்ந்து தங்களின் பேராதரவை தர வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். தேனி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ்நாராயணன் நன்றி கூறினார்.  இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பழனிசெட்டிபட்டி பேரூர் கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து