முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்காலத்தில் தவறு செய்யாமல் இருக்க இளம் வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும் - முன்னாள் வீரர் ட்ராவிட் கருத்து

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத், : சரியான வழிகாட்டுதல் இருந்தால் வீரர்கள் எதிர்காலத்தில் தவறிழைக்க வாய்ப்பு இருக்காது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் தெரிவித்தார்.

அறிவுரைகள்...

இந்திய கிரிக்கெட் அணியில் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் விவகாரம். இருவரும் கரண்ஜோஹரின்  ’காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். இது பெரும் பிரச்னையானது. இதையடுத்து, இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. ஆஸ்திரேலியாவில் விளையாட சென்றிருந்த இருவரும் நாடு திரும்பினர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மூத்த வீரர்கள் உதவியுடன், இளம் வீரர்களுக்கும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்க திட்டமிட்டுள்ளது.

சரியான வழிகாட்டுதல்...

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய 19வயதிக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட் கருத்து தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதற்கு முன்னதாக வீரர்கள் தவறிழைக்கவில்லை என்று கூற முடியாது. ஆனால் இனி சரியான வழிகாட்டுதல் இருந்தால் வீரர்கள் எதிர்காலத்தில் தவறிழைக்க வாய்ப்பு இருக்காது. இந்த விவகாரத்தை இதற்கு மேலும் பேசிபேசி நீட்டிக்கத்தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

பயிற்சி அளிக்க வேண்டும்

19வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டுக்கும் முன்னர் நாங்கள் வீரர்களுக்கு பல கோணங்களில் ஆலோசனைகளை வழங்கினோம். உளவியல் ரீதியதாகவும்,அவர்களின் பொறுப்புகள் குறித்தும் தெளிவாக விளக்குகிறோம். இது தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஏற்கெனவே இருக்கும் ஒரு நடைமுறை தான். வீரர்களை நல்ல முறையில் உருவாக்க வேண்டுமென்றே நாங்கள் நினைக்கிறோம். ஆனால் வீரர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் நாங்கள் பொறுப்பாக முடியாது. அவர்களுக்கான பயிற்சி பள்ளிகளில் இருந்தும், வீடுகளில் இருந்தும் தொடங்கப்பட வேண்டும். பின்பு தான் ஓய்வு அறையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

புரிய வைக்க வேண்டிய...

மேலும் வீரர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதமான சூழ்நிலையில் இருந்தும், வெவ்வேறான அணிகளில் இருந்தும் வருகிறார்கள். அதனால் அவர்களின் பொறுப்பு குறித்து நாம் விளக்க வேண்டியுள்ளது. என் அருகில் யாரும் அமர்ந்துகொண்டு எனக்கு பாடம் எடுக்கவில்லை. நான் அனைவரையும் கவனித்து கற்றுக்கொண்டேன். எனது மூத்த வீரர்களை, எனது பயிற்சியாளர்களை, எனது பெற்றோரை பார்த்து கற்றுக்கொண்டேன். ஓய்வு அறை நடவடிக்கைகளை நமது மூத்த வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். வீரர்களின் பொறுப்புகளை அவர்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறோம். நாம் அவர்களை வழி நடத்த வேண்டும் என்று ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து