முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.யை தொடர்ந்து நியூசிலாந்திலும் தொடர்ந்த இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் சாதனை பயணம்

செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

நேப்பியர் : ‘என்னாது நியூசிலாந்து தொடரை இந்தியா வென்று விட்டதா?.. போட்டி ஆரம்பிச்சது தெரியல அதுக்குல்ல ஜெயிச்சுட்டாங்கலா’ இப்படிதான் ஒருவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். ஆம், 5 போட்டிகள் கொண்ட தொடரில், 2 போட்டிகள் மிச்சமிருக்கையில், முதல் 3 போட்டியில் வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டது. இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம், இந்திய அணியில் சாதனைப் பட்டியலில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றுள்ளன

10 வருட சவால்

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி 2009ம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி 10 வருடங்கள் கழித்து தற்போது அந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது. #10YearChallenge என்ற ஹேஷ்டேக்கில் சிலர் இந்த கருத்தினை பதிவிட்டு வருகிறார்கள். 

சாதனைகள்

1) தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடர்களை வென்ற ஒரே ஆசிய கேப்டன் கோலி.
2) நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வென்ற அணி இந்தியா.
3) அந்நிய மண்ணில் விராட் கோலி தலைமையிலான அணி 7 தொடர்களில் விளையாடி 6ல் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 13 தொடர்களில் விளையாடி 12ல் வெற்றி பெற்றுள்ளது.
4) விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 63 போட்டிகளில் விளையாடி 47ல் வென்றுள்ளது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 50 போட்டிகளில் வென்று முதலிடத்தில் உள்ளார்.
5) ஆசிய கேப்டன்களைப் பொறுத்தவரை விராட் கோலிதான் அதிக வெற்றிக்கான சராசரி வைத்துள்ளார். கோலிக்கு (72.72%) அடுத்தபடியாக பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் (58.09%), ஜெயவர்த்தனே (57.14), கங்குலி (57.35) உள்ளனர்.

சிக்ஸர் மைல்கல்

இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டோனியுடன் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். டோனி, ரோகித் இருவரும் தலா 215 சிக்ஸர்கள் விளாசியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சச்சின் (195), கங்குலி (189), யுவராஜ் (153) ஆகியோர் உள்ளனர்.

டோனி இல்லாத போட்டி

டோனி ஒருநாள் போட்டிக்கான அணியில் அரிதாகவே இடம்பெறாமல் இருப்பார். நியூசி.க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியோடு சேர்த்து மொத்தம் 5 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. 2007ம் ஆண்டு அயர்லாந்து மற்றும் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. 2013ம் ஆண்டு தசைப்பிடிப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.
நியூசிலாந்தில் அதிக ஒருநாள் போட்டிகளில் வென்ற கேப்டன்:
அசாருதீன் - 5, டோனி - 3, கோலி - 3, கங்குலி - 2
குறிப்பிட்ட சில பேட்ஸ்மேன்களின் சிறந்த ஆட்டங்களால்தான் பெரும்பாலான தொடர்களை இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். பேட்ஸ்மேன், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்டத்திறனால் தொடரை வெல்வது அரிது. அந்த வகையில் இந்த தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வேகப்பந்து வீச்சாளராக ஷமி இந்தத் தொடரில் ஜொலித்தார். சாஹல், குல்தீப் ஜோடி சுழற்பந்து வீச்சில் பட்டையை கிளப்பியது. பகுதிநேர பந்துவீச்சாளராக கேதர் ஜாதவும் சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங்கை பொறுத்தவரை வழக்கமாக ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய முன்வரிசை வீரர்கள் தான் செயல்பட்டு வந்தார்கள். ஆனால், இந்தத் தொடரில் முன்வரிசை வீரர்களையும் தாண்டி டோனி, ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்கள் மத்தியில் சிறப்பாக விளையாடினர். பீல்டிங்கிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.

3-வது ஒருநாள் போட்டியில் சாஹல் பந்துவீச்சில் பாண்ட்யாவிடம் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கேட்சாகி ஆட்டமிழந்தார். இந்த கேட்சினை பாண்ட்யா காற்றில் பறந்தபடி டைவ் அடித்து பிடித்தார். பாண்ட்யா பாய்ந்து பந்தினை பிடித்த படங்கள் ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டது.

இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்தது. அதனால், பல போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. டோனி கடந்த ஆண்டில் பார்மில் இல்லாததும் பிரச்னையாக இருந்து வந்தது. அதனால், 4, 5, 6வது இடங்களுக்கு பல பேட்ஸ்மேன்களை கோலி மாற்றிப் பார்த்தார்.

பார்முக்கு திரும்பிய...

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முதல் டோனி மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த வரிசையில் அம்பத்தி ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் அட்டகாசமாக போட்டியை முடித்து வைத்தனர். எந்தவொரு பதட்டமும் இல்லாமல் 7 ஓவர்களுக்கு முன்பாகவே ஆட்டத்தை வெற்றிபெற செய்துள்ளனர். இது, இந்திய அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

ஆஸ்திரேலியா தொடரில் டோனி தொடர்ந்து மூன்று அரைசதம் விளாசிய போது, அவர் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக டோனி மீது கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. டோனி ஓய்வு பெற வேண்டும், உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். அதனால், டோனி மீண்டும் பார்முக்கு வந்தது இந்திய அணிக்கு நம்பிக்கையை கொடுத்தது.

இடத்தை பிடிக்க..

இது ஒருபுறம் இருந்தாலும், உலகக் கோப்பைக்கான அணியில் தன்னுடைய இருப்பை தக்கவைத்து கொள்ளவே ஆடுகிறார் என்ற கருத்து எழுந்தது. அதேபோல், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது என்றே பலரும் கூறியுள்ளனர். ராயுடு, தினேஷ் கார்த்திக் என பலரும் தங்களுடைய இடத்தை அசத்தலாக உறுதி செய்துள்ளனர். ஒருவருக்கொரு சொதப்பாமல் போட்டி போட்டு விளையாடினர். இதனால் மிடில் ஆர்டரில் யாராவது செட் ஆவார்களா? என்ற நிலை சென்று, தற்போது யாரை எடுப்பது என்ற குழப்பமே உருவாகும் நிலை வந்துவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து