முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஷன் ஷோவில் சாய்னா நேவால், பி.வி.சிந்து

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

லாக்மே சம்மர் ரெசார்ட் 2019 பேஷன் ஷோவில் பி.வி.சிந்து காலணிகளின் பிராண்டான மிஸ் ஃபிட் பாண்டாவின் ஷோஸ்டாப்பராகவும்; சாய்னா நேவால் டிசைனர் வாணி ரகுபதிக்காக ஷோஸ்டாப்பராகவும் மேடையை அலங்கரித்தனர்.  ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடைபெறும் லாக்மே ஃபேஷன் வீக் இந்திய டிசைனர்களுக்கு அங்கீகாரத்தை அளிக்கும். அதேபோல் இந்த வருடமும் 2019-ம் ஆண்டிற்கான சம்மர் ரெசார்ட் ஷோ 5 நாட்கள் பிரமாண்டமாக நிறைவடைந்தது. நிறைவு நாளில்  இந்திய வீராங்கனைகள் பி.வி. சிந்துவும், சாய்னா நேவாலும் கலந்துகொண்டனர்.

பி. வி சிந்து இந்தியாவின் பிரபல பிராண்டான மிஸ்ஃபிட் பாண்டாவின் ’தி சீக்ரெட் கார்டன் ‘என்கிற தலைப்பில் வெளியிட்ட காலணிகளுக்கு ஷோஸ்டாப்பராக அணிவகுத்தார். அதில் பி.வி சிந்து வெள்ளை நிற ஆடையில் அழகாக மேடையை அலங்கரித்தார். அவர் அணிந்து வந்த காலணி ஸ்ணீக்கர்ஸில் பூட்ஸ் டைப் வகையில் டிசைன் செய்யப்பட்டிருந்தது. கன்டெம்பரரி ஸ்டைலில் அந்த ஷூ காண்போரை வெகுவாக ஈர்க்கச் செய்தது.

அடுத்ததாக சாய்னா நேவால் சென்னையைச் சேர்ந்த டிசைனர் வாணி ரகுபதியின் எலிகண்ட் கலெக்‌ஷன்களுக்கு அட்டகாசமாக பொருந்தியிருந்தார்.  மஞ்சள் நிற லெஹங்கா ஆடை சாய்னாவிற்கு கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. மொத்தத்தில் சாய்னா நேர்த்தியான நடையால் மேடையை தனதாக்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து