மம்தா ‘நவீன ஜான்சிராணி’ பா.ஜ.க வால் வீழ்த்த முடியாது: திரிணாமுல் காங். எம்.பி.

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      இந்தியா
Mamta 29-10-2018

புதுடெல்லி, மம்தா ‘நவீன ஜான்சி ராணி’ அவரை சாதாரணமாக எடை போட வேண்டாம் என்று பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி தினேஷ் திரிவேதி பேசினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுகையில், சி.பி.ஐ.யின் நடவடிக்கையை கண்டித்து பேசினார்கள்.

அக்கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி பேசுகையில் மம்தா பானர்ஜியை நவீன ஜான்சி ராணி என்று வர்ணித்தார். அவர் பேசியதாவது:-

மத்திய அரசு சி.பி.ஐ.யை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது. எங்கள் தலைவர் மம்தா பானர்ஜி இன்றைக்கு ஜான்சி ராணியாக திகழ்கிறார். நவீன ஜான்சி ராணியான அவரை சாதாரணமாக எடை போட வேண்டாம். அவரை யாராலும் வீழ்த்த முடியாது. மக்கள் அவர் பக்கம் இருக்கிறார்கள்.

நாடு சுதந்திரம் அடையும் முன்பு ஆங்கிலேயர்கள் தான் நம்மை அடக்கி ஆண்டார்கள். அதுபோல் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார்கள். ஆட்சியாளர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன் ஜான்சி ராணியை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஜான்சிராணி யார்? அவர் ஒரு சாதாரண பெண்மணிதான். ஆனால் அவரால் தான் ஜான்சியை பாதுகாக்க முடியும்” என்று மக்கள் தேர்வு செய்தனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து