இந்தியாவில் இருப்பதாக உணர்ந்தேன்: நியூசிலாந்து முன்னாள் வீரர் ஆச்சரியம்

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      விளையாட்டு
Nathan mccullum 2019 02 09

ஆக்லாந்து,  ஆக்லாந்து மைதானத்தில் இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்த்தபோது, இந்தியாவுக்கே திரும்பி வந்துவிட்டது போல உணர்ந்தேன் என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், நாதன் மெக்குலம் தெரிவித்துள்ளார்.

இந்தியா வெற்றி...

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடருக்குப் பிறகு இப்போது டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 158 ரன் எடுத்திருந்தது. அதை சேஸ் செய்த இந்திய அணி 18.5 ஓவர்களில் 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 50 ரன்னும் ரிஷாப் 28 பந்துகளில் 40 ரன்னும் எடுத்தனர்.

குடும்பத்துடன்...

இந்நிலையில் இந்தப் போட்டியை தனது குடும்பத்தினருடன் வந்து கண்டு களித்தார் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர், நாதன் மெக்குலம். அங்கு இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தை கண்ட அவர், ’இந்தியாவுக்கே திரும்பி வந்துவிட்டது போல உணர்ந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘’குடும்பத்துடன் கிரிக்கெட்டை பார்க்க வந்தேன். இந்திய ரசிகர்கள் என் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளித்தார்கள். இந்திய வீரர்களுக்கு அவர்கள் அளித்த உற்சாகத்தையும் கண்டேன். கிரிக்கெட் மீதும் வீரர்கள் மீதும் அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும் அன்பையும் ரசித்தேன். இதைப் பார்த்தபோது, இந்தியாவுக்கே திரும்பி வந்துவிட்டேனோ என்று உணர்ந்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். நாதன் மெக்குலம் ஐபிஎல் போட்டியில் புனே வாரியர், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்காக விளையாடியவர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து