முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. எம்.பி கீர்த்தி ஆசாத் காங்கிரஸில் இணைந்தார்

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவரும், எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீது 2015-ம் ஆண்டு பா.ஜ.க. எம்பி கீர்த்தி ஆசாத் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். இதையடுத்து, கட்சியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தர்பங்கா தொகுதி எம்.பி.யான அவர் அதிருப்தியுடன் இருந்து வந்தார்.
கட்சி தாவினால் பதவி பறிக்கப்பபடும் என்பதால் மற்ற கட்சிகளில் சேரவில்லை. அதுபோலவே பா.ஜ.க. நடவடிக்கைகளிலும் அவர் ஒதுங்கியே இருந்து வந்தார். பா.ஜ.க. சார்பில் மூன்று முறை எம்.பி.யான கீர்த்தி ஆசாத், சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ளார். கடந்த 15-ம் தேதியே காங்கிரஸில் இணைந்துள்ளார்.

எனினும் புல்வாமா தாக்குதல் காரணமாக வீர மரணமடைந்த வீரர்களுக்கு நாடுமுழுவதும் அஞ்சலி நடந்து வந்ததால் தாமதமாக இதனை அறிவிப்பதாக கீர்த்தி ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து