முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு - தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்தாண்டே நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

மசோதா தாக்கல்

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் காட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற முறை தற்போது அமலில் உள்ளது. அப்படியும் தேர்ச்சி என்று இருப்பதால் மாணவர்கள் படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்துவதில்லை என்றும் இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறி வந்தது. அதற்காக இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு  5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. அது மட்டும் இல்லாமல், மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையினை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

பரிசீலனை செய்ய...

இந்த புதிய முறைக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டாய தேர்ச்சி என்பதால் மாணவர்கள் அதிகபட்சமாக 8ம் வகுப்பு வரையும் படிப்பார்கள், பொதுத்தேர்வு வைத்து மாணவர்களை வடிகட்டினால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பரிசீலனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பள்ளிகல்வித்துறை...

இந்நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்தாண்டே நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித்துறை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து