முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபிநந்தன் ஒப்படைக்கப்படும் வரை லாகூரியில் தங்கியிருந்து ஆய்வு செய்த இம்ரான்கான்

சனிக்கிழமை, 2 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : விமானப்படை வீரர் அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும் வரை இம்ரான்கான் லாகூரில் தங்கியிருந்து ஆய்வு செய்தார். பின்னர் இரவு 10.30 மணிக்கு இஸ்லாமாபாத்துக்கு அவர் புறப்பட்டு சென்றார்.

பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய வீரர் அபிநந்தனை விடுதலை செய்வோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதன் பிறகு அவர் அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார்.

இதற்கிடையே அபிநந்தன் ராவல் பிண்டியில் இருந்து லாகூருக்கு அழைத்து வரப்பட்ட சிறிது நேரத்தில் பிரதமர் இம்ரான்கானும் லாகூருக்கு வந்து சேர்ந்தார். லாகூரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபடி அவர் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் நடவடிக்கை பணிகளை கேட்டு அறிந்து ஆய்வு செய்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தை முற்றிலுமாக தணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்ரான்கான் லாகூர் வந்து தங்கியிருந்ததாக பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண முதல்வர்  உஸ்மான் பஸ்தர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து