முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கின்னஸில் இடம் பிடித்த ஜப்பான் மூதாட்டி தனாகா

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

டோக்யோ : ஜப்பானின் புகுவோகா பகுதியை சேர்ந்த 116 வயதான கானே தனாகா, உலகின் மிக வயதான பெண்ணாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

கிழக்காசிய நாடான, ஜப்பானின் டோக்கியோவை சேர்ந்த சியோ மியாகோ, உலகின் மிக வயதான பெண்ணாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், சியோமி யாகோ, தனது 117-வது வயதில் இறந்தார்.

இதையடுத்து, தென்மேற்கு ஜப்பானின் புகுவோகாவை சேர்ந்த 116 வயதான கானே தனாகா, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தற்போது, மருத்துவமனையில் உள்ள, கானே தனாகாவை சந்தித்த கின்னஸ் புத்தக அதிகாரிகள் உலக சாதனைக்கான சான்றிதழை அவரிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தனாகாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து