வடகொரிய அதிபரை மீண்டும் சந்திக்க டிரம்ப் தயார்: அமெரிக்கா

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      உலகம்
trump-kim 2019 02 26

வாஷிங்டன் : வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திக்க டிரம்ப் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த முதல் உச்சி மாநாட்டுக்கு பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர். ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் அன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது இதனை அவர் கூறினார். மேலும் வியட்நாம் சந்திப்பின்போது டிரம்ப் பாதியிலேயே எழுந்து சென்றதற்கு பேச்சுவார்த்தை முறிந்ததாக பொருள் கிடையாது. அந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்படாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்று கூறினார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து