ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆயிரத்து 588பேர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினர்

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      ராமநாதபுரம்
10th exam center collr  inspection photo copy

ராமநாதபுரம்-ரா மநாதபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையமான சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின்னர் அவர் தெரிவித்ததாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான அரசு பொதுத் தேர்வு 29.03.2019 வரை நடைபெறவுள்ளது.     மாவட்டத்தில் மொத்தம்  75 மையங்களில் 252 பள்ளிகளைச் சார்ந்த 8,366 மாணவர்கள்,  8,606 மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 616 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 17,588  மாணாக்கர்கள் தேர்வு எழுதுகின்றனர்.  பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 75 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களாக 75 பட்டதாரி ஆசிரியர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்ற 922 ஆசிரியர்களும், சொல்வதை கேட்டு எழுதுபவர்களாக 44 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்த்திட கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கு  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக 123 ஆசிரியர்களைக் கொண்டு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  பறக்கும் படையினர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீர் பார்வையிட்டு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதிடும் வகையில் தேவையான போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும் தேர்வு மையங்களில் மாணாக்கர்களுக்கு தேவையான குடிநீர்; வசதி மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வெழுதும் மாணவர்களைத் தவிர வெளியாட்கள் எவரும் தேர்வு மையத்திற்குள் நுழையாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) டி.பிரேம்; உடனிருந்தார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து