முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.

சூதாட்ட புகார்...

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த தனி நீதிபதி, தடையை ரத்து செய்தார். இதனை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் பிசிசிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை தொடரும் என உத்தரவிட்டது.

மேல்முறையீடு...

இதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வேகபந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது. அத்துடன் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வது குறித்து பி.சி.சி.ஐ முடிவெடுக்கலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஸ்ரீசாந்திற்கு தற்போது 37 வயது ஆகிறது. அவர் உடல் எடையும் அதிகரித்து, பயிற்சியில் ஈடுபடுவதையும் தொடரவில்லை. எனவே அவர் இனி கிரிக்கெட் விளையாடுவாரா ? என்பது சந்தேகத்திற்குரிய ஒன்று தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து