முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க மனுத்தாக்கல்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, தமிழகத்தில் 18 தொகுதியுடன் 3 தொகுதிக்கும் இடைத்தேர் தல் நடத்தக் கோரி தி.மு.க. தேர்தல் ஆணையத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்தது.  

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலோடு தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.   இந்த நிலையில் 18 தொகுதி இடைத்தேர்தலுடன் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து 2 வாரத்தில் தேர்தல் கமிஷன் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் 18 தொகுதியுடன் 3 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.க்கள் மனுவை அளித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தொடரப்பட்ட வழக்குக்கு விரைந்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனை கேட்டுக் கொண்டதாகவும், அதனை ஏற்றுக் கொண்டு தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததாகவும் திருச்சி சிவா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து