முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழா கொண்டாட்டம்: மதுரை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சித்திரை திருவிழாவை காரணம் காட்டி மதுரை தொகுதி தேர்தலை தள்ளி வைக்க கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்துக்கு மறுநாள் ஏப்ரல் 18-ம் தேதி மதுரை மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இதே நாளில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது தென்மாவட்ட பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியது.

இதனிடையே மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தலை ஒத்திவைக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் மனு தாக்கல் செய்தார். தேர்தல் நடக்கும் ஏப்ரல் 18-ம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. அதனால் மதுரை தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் - சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது மதுரை சித்திரைத் தேர்த் திருவிழா நாளில் தேர்தல் நடத்துவது ஏன் ? 5 லட்சம் பேர் பங்கேற்கும் மதுரை சித்திரைத் திருவிழாவை கருத்தில் கொள்ளாதது ஏன்? 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டவில்லையா? என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். பின்னர் இது குறித்து ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும் மதுரையில் மட்டும் தேர்தலை ஒத்திவைத்தால் பிற இடங்களில் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் வாக்களிக்க கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்க தயார் என்றும் தேர்தல் ஆணையம் தமது பதிலை அறிக்கையாக தாக்கல் செய்தது. மேலும் சித்திரை திருவிழா நடைபெறுவதால், வாக்குப்பதிவு செய்வதற்கான நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது சித்திரை திருவிழா காரணமாக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும் மதுரை மக்களின் வசதிக்காக இரவு 8 மணி வரை வாக்குப்பதிவை நீட்டித்துள்ளோம் என்றும் தேர்தல் ஆணைய தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் முடிவை கேட்ட பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாகவும், கூடுதல் நேரம் மட்டுமே வழங்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை ஐகோர்ட் வழங்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து