முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று பந்திபோரா மற்றும் சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரவு வரை நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களை கேடயமாக பிடித்து வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். அதன் பின்னர் சண்டையின் போது ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதே போல் சோபியான் மாவட்டம் இமாம்சாகிப் பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பாரமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து