முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்: டோனியின் மஞ்சள் படையை சமாளிக்குமா கோலியின் படை? முதல் போட்டியில் இன்று மோதல்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : கிரிக்கெட் ரசிகர்களால் ஆவோலோடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஐ.பி.எல் திருவிழா இன்று ஆரபமாகிறது. இன்று இரவு நடைபெறும் தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்துகின்றன.

சேப்பாக்கத்தில்...

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இன்று (மார்ச் 23) சென்னையில் தொடங்க உள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. முதல் போட்டியிலேயே பெங்களூரு அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. மூத்த வீரர்கள் அணி என்று கூறி விமர்சனம் செய்தவர்களுக்கு 2 ஆண்டுகள் தடைக்குப்பிறகு மீண்டு வந்து 3-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சென்னை அணி பதிலடி கொடுத்ததை யாரும் எளிதில் மறக்க முடியாது.

சி.எஸ்.கே-வின் பலம் vs பலவீனம்:

டோனி தலைமையிலான சென்னை அணி, கடந்த 2018 சீசனில் வீரர்களின் வயது வெறும் எண்கள்தான், ஆட்டத்தைக் குறிக்காது என்று நிரூபித்தனர். கடந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் விளையாடி சென்னை அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குச் சென்றது. அதில், புனேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்று கெத்தாக கோப்பையை வென்றது.

கோப்பை வெல்ல உதவிய பல வீரர்களை சென்னை அணி தக்கவைத்துக்கொண்டது. 2019 வீரர்கள் ஏலத்தில் மோஹித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இருவரை மட்டும் வாங்கியது. ஒரே பலவீனம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.

ஆர்.சி.பி-யின் பலம் vs பலவீனம்:

2018-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு மோசமான சீசனாக அமைந்தது. அந்த அணி 14 லீக் போட்டிகளில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 8 அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்துடன் சீசனை முடித்துக்கொண்டது. கோலியின் அணி முதல் 10 போட்டிகளில் வெறும் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

2018-ல் விளையாடிய 15 வீரர்களை பெங்களூரு அணி தக்க வைத்துக்கொண்டது. 2019 வீரர்கள் ஏலத்தில் 9 வீரர்களை வாங்கியது. அதில், ஹெட்மையர், ஷிவம் துபே மற்றும் கிளாசென் ஆகியோர் எதிர்பார்புக்குரிய வீரர்களாக இருக்கின்றனர். சர்வதேச போட்டிகளில் விளையாடும் மார்கஸ் ஸ்டோயினிஸ் மற்றும் நாதன் கோல்டர்-நைல் இல்லாதது பின்னடைவாக இருக்கும்.

வெற்றி vs தோல்வி விகிதம்:

ஐ.பி.எல் தொடரில் மொத்த 22 முறை இரு அணிகளுக்கும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சி.எஸ்.கே 14 முறையும், ஆர்.சி.பி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. சேப்பாக்கத்தில் சென்னை அணி 34 வெற்றிகள், 14 தோல்விகளை பெற்றுள்ளது. பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இது குறிப்பிடத்தக்க வகையிலான பலம் - பலவீனம் இல்லையே என சிலர் நினைக்கலாம். தொடக்க போட்டி என்பதால் எந்த வீரர்களின் திறமையையும் குறைத்து மதிப்பிட முடியாது. அனைத்து வீரர்களுமே தங்களுடைய முழுத்திறமையையும் காட்டி போட்டியை வெல்ல முயற்சிப்பார்கள்.

இரு அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.ஐ.பி.எல். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து