முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: தமிழகம் - புதுவையில் இன்று வேட்புமனு தாக்கல் முடிகிறது - பார்லி. தேர்தலுக்கு இதுவரை 428 பேர் மனுத் தாக்கல்

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இதுவரை 428 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

19-ம் தேதி துவக்கம்...

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள 18 சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி கடந்த 19-ம் தேதி துவங்கியது. இதையடுத்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்தனர். நேற்று திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதே போல் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

428 பேர் மனு தாக்கல்

மதுரையில் போட்டியிடும் வி.வி.ஆர். ராஜ்சத்யன் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான பா.ஜ.க. வேட்பாளர் ஹெச். ராஜாவும், தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசை சவுந்திரராஜனும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதே போல் தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர் பழனி மாணிக்கம் உள்ளிட்டோரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். கரூரில் போட்டியிடும் தம்பி துரை காலையில் அங்குள்ள தேர்தல் அலுவலகத்திலும், தேனி தொகுதியில் போட்டியிடும் இளங்கோவனும், கூட்டணி கட்சியினருடன் சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் ஆகியோரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பாராளுமன்ற தேர்தலுக்கு இதுவரை 428 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு இதுவரை 195 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இன்று கடைசி நாள்

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி இன்றோடு நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 29-ம் தேதியாகும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இதுவரை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தங்களது மனுக்களை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு தேர்தல் களம் இன்னமும் சூடு பிடிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து