முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்விட்டரில் காம்பிரை ப்ளாக் செய்தார் மெகபூபா முப்தி

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ட்விட்டரில் நடந்த கருத்து மோதலையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தவருமான கவுதம் காம்பிரை, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பிளாக் செய்துள்ளார்.

கருத்து மோதல்

காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வகை செய்யும், அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஏ ஆகிய ஷரத்துகள் நீக்கப்படும் என்ற பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை கண்டிக்கும் விதமாக மெகபூபா முப்தி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து மெகபூபாவின் கருத்தை விமர்சிக்கும் விதமாக காம்பிர் பதிலளித்ததால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்தது.

இதையடுத்து காம்பிரை ப்ளாக் செய்த மெகபூபா, அரசியலுக்கு வரும் புதியவர்கள், தங்களிடம் காஷ்மீர் குறித்த அரசியல் புரிதலை கொண்டிராத நிலையில், அதுகுறித்து கருத்து கூறுவதையும் தவிர்க்கலாம் எனும் தொனியில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து