முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: 91 மக்களவை தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : 17-வது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நேற்று நடந்து முடிந்தது.

மக்கள் ஆர்வம்...

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று (ஏப்ரல் 11-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

சட்டசபைக்கும்...

அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே நாளில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அடிதடி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து