ஜடேஜாவின் தந்தை, சகோதரி காங்கிரசில் இணைந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      விளையாட்டு
Jadeja 2019 04 14

Source: provided

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சின், சகோதரி நைனாபா ஆகியோர் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா . இவரது மனைவி ரிவபா சோலங்கி. இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்யானா என்ற பெண் குழந்தை உள்ளது. ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா கடந்த மாதம் பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சின், சகோதரி நைனாபா ஆகியோர் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு ஜடேஜாவின் தந்தை அனிருத்சின் மற்றும் மூத்த சகோதரி நைனாபா ஆகியோர் நேற்று சென்றனர். அங்கு ஹிருதிக் படேல் மற்றும் ஜாம்நகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் முலு கண்டொரியா முன்னிலையில் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து