முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் போராட்டத்தில் ஹிஜாப்பை கழற்றிய பெண் வழக்கறிஞருக்கு ஓராண்டு சிறை

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

Source: provided

டெஹரான் : போராட்டம் ஒன்றில் ஹிஜாப்பை கழட்டியதற்காக ஒராண்டு சிறைத் தண்டனையை பெற இருக்கிறார் ஈரானை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர்.

இது தொடர்பாக  ஊடகம் வெளியிட்ட செய்தியில்,” ஈரானைச் சேர்ந்தவர் விதா முவாஹெத் என்ற இளம் வழக்கறிஞர் கடந்த ஆண்டு 2018 ஆம் ஆண்டு ஹிஜாப் கட்டாய சட்டத்துக்கு எதிராக தான் தலையில் கட்டியிருந்த ஹிஜாப்பை கழட்டினார். இதன் காரணமாக இவர் ஓராண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க இருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

விதா இந்த வழக்கு தொடர்பாக முன்னரே ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, “நீதிபதி விதாவுக்கு இரண்டு வயது குழந்தை உள்ளதை உணந்திருக்கிறார்.

மேலும் ,அவரது செயலில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார். ஈரான் மற்றும் சவுதியில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து