பெரு முன்னாள் அதிபர் ஆலன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      உலகம்
Peru- former President-Alan 2019 04 19

லீமா, தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெருவில், கடந்த 1985-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரையிலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலும் அதிபராக பதவி வகித்தவர் ஆலன் கார்சியா.  இவர் தனது 2-வது பதவி காலத்தின் போது, பிரேசிலை சேர்ந்த கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தார். 

இந்த நிலையில், ஆலன் கார்சியா மீதான ஊழல் வழக்கு தொடர்பாக அவரை கைது செய்வதற்காக போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும், ஆலன் கார்சியா தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

சற்று நேரத்தில் அந்த அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனடியாக போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு ஆலன் கார்சியா துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கிடந்தார்.  உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து