72 மணிநேர தடைக்கு பின்னர் பிரசாரத்தை மீண்டும் தொடங்கினார் யோகி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      இந்தியா
yogi-adityanath 2018 10 31

லக்னோ,தேர்தல் கமிஷனால் 3 நாள் தடை விதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் நேற்று தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கினார்

உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் மீரட் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த தேர்தல் கமிஷன் கடந்த 16-ம் தேதியன்று காலை 6 மணிமுதல் 72 மணி நேரத்துக்கு அவர் பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடை நேற்று காலையுடன் முடிவடைந்ததால் யோகி ஆதித்யாநாத் மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து