முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனித வெள்ளி தினம்- இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அநீதி மற்றும் சமத்துவமின்மை நீங்கிய உலகம் உருவாக இயேசு கிறிஸ்துவின் போதனைகள் முக்கியத்துவமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி  என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்.

கல்வாரி மலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இந்தியாவில் வாழும் கிறிஸ்தவ மக்கள் நேற்று புனித வெள்ளியன்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்நிலையில், இந்நாளில் பிரதமர் நரேந்திர மோடி, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்றைய நாளில் இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை நாம் நினைவுகூர்கிறோம், அவரது வாழ்க்கை, உயர்வான தத்துவங்கள் மற்றும் அளப்பரிய தீரம் போன்றவை பலருக்கு உத்வேகம் அளிக்கும் பக்கபலமாக அமைந்துள்ளது. 

அநீதி மற்றும் சமத்துவமின்மை நீங்கிய உலகம் உருவாக இயேசு கிறிஸ்துவின் போதனைகள் முக்கியத்துவமான காரணமாகும்’ என குறிப்பிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து