இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் மன்னிக்கமுடியாத கொடூரச்செயல் - சரத்குமார் கண்டனம்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      தமிழகம்
sarathkumar 2019 04 22

சென்னை : இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் ஈஸ்டர் திருநாளில் அமைதியைக் குலைக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட மன்னிக்கமுடியாத கொடூரச்செயல்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

உலகம் முழுவதும், ஏசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, இலங்கையில், புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில், 250க்கும் மேற்பட்ட மக்கள் பலியான சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. ஈஸ்டர் திருநாளில், அமைதியைக் குலைக்கும் விதமாக, திட்டமிட்டு அரங்கேறியிருக்கும் இக்கொடூரச் செயல், மன்னிக்கமுடியாத கண்டனத்திற்குரிய குற்றமாகும்.எந்த நாட்டில் நிகழ்ந்தாலும், தீவிரவாதத் தாக்குதல் என்பது வேரோடு களைந்தெடுக்கப்படவேண்டிய ஒன்று என்பதை சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இலங்கை மண்ணில், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பல்லாண்டு கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கும்போது நடந்திருக்கும் இச்சம்பவம், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.எதிர்பாராத விதமாக ஏற்பட்டிருக்கும் அசம்பாவித சம்பவங்களால், அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இலங்கை அரசுக்கு பக்கபலமாக இந்திய அரசு எல்லாவகையிலும் துணை நின்று, தேவையான அனைத்து உதவிகளும் புரிந்திடவேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.தீவிரவாதத் தாக்குதல்களில் பலியான இலங்கை மக்களின் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இச்சம்பவத்தால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 450க்கும் மேற்பட்டவர்கள் விரைந்து குணமடைய என் பிரார்த்தனைகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அறிக்கையில் கூறினார்

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து