முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினேஷ் கார்த்திக் அதிரடி வீண்: பரங், ஆர்ச்சர் அதிரடியில் ராஜஸ்தான் அணி வெற்றி

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : ஐ.பி.எல். தொடரில், கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்துவீச முடிவு...

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் லின், சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை ஆரோன் வீசினார். முதல் 3 பந்துகளை சந்தித்த லின், ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். 5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்தது. சுப்மன் கில் 14 ரன்னில் ஆரோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

176 ரன் இலக்கு...

பின்னர் வந்த ரானா 21, சுனில் நரைன் 11 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். மறுமுனையில் ரஸல் 14 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் கை வலியால் அவதிப்பட்டார். அடுத்து வந்த பிராத்வெயிட் 5 ரன்னில் அவுட் ஆனார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் தினேஷ் கார்த்திக் தன்னுடைய அதிரடியை தொடர்ந்தார். இதனால் அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50 பந்துகளில், 9 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 97 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் தினேஷ் கார்த்திக்.

ஆரம்பம் தடுமாற்றம்...

பின்னர் பேட்டிங்கைத் தொடங்கிய ராஜஸ்தான் அணியில், ரஹானேவும் (21 பந்தில் 34 ரன்) சஞ்சு சாம்சனும் (15 பந்தில் 22 ரன்) நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால், அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 2 ரன்னிலும் பென் ஸ்டோக்ஸ் 11 ரன்னிலும் நடையை கட்ட, ராஜஸ்தான் அணி தடுமாறத் தொடங்கியது.

ராஜஸ்தான் வெற்றி...

அடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி 11, ஸ்ரேயாஸ் கோபால் 18 ரன் எடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் இளம் வீரர் ரியான் பரங் நிற்கும்வரை வெற்றி உறுதி என்ற நிலையில் அவர் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழக்க பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அவர் 31 பந்தில் 47 ரன் விளாசினார். கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 9 ரன் தேவைப்பட்டது. பந்தை எதிர்கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கி, வெற்றியை வசப்படுத்தினார்.  ராஜஸ்தான் அணி, 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஃரா ஆர்ச்சர், 12 பந்துகளில் 27 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து