முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய நவோமி, கிகி பெர்ட்டன்ஸ், சிமோனா ஹாலெப்

புதன்கிழமை, 8 மே 2019      விளையாட்டு
Image Unavailable

மாட்ரிட் : மாட்ரிட் ஓபன் டென்னிஸில் நவோமி ஒசாகா, கிகி பெர்ட்டன்ஸ், சிமோனா ஹாலெப் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டன்ஸ் 12-ம் நிலை வீராங்கனையான செவஸ்டோவாவை எதிர்கொண்டார். இதில் கிகி பெர்ட்டர்ன்ஸ் 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.  மற்றொரு காலிறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் விக்டோரியா குஸ்மோவாவை எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-0, 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். முதல் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் சான்ஸ்னோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து