தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் கோரிக்கை: கண்டுகொள்ளாத கிரிக்கெட் வாரியம்!

சனிக்கிழமை, 11 மே 2019      விளையாட்டு
South African 04-11-2018

Source: provided

கேப்டவுன் : ஐபிஎல் தொடரில் இருந்து, தென்னாப்பிரிக்க வீரர்களை மே மாதத்துக்குள் விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டின் பயிற்சியாளர் கிப்சன் விடுத்த கோரிக்கையை, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளாதது இப்போது தெரியவந்துள்ளது.

30-ம் தேதி தொடக்கம்...

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் பல்வேறு நாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்க இருப்பதால், அதில் பங்கேற்றுள்ள வீரர்கள், தங்கள் நாடுகளுக்குத் திரும்பிவிட்டனர். இங்கிலாந்து, ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து வீரர்கள் தங்கள் நாட்டுக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், முக்கியமான தென்னாப்பிரிக்க வீரர்கள் நாடு திரும்ப வில்லை.

திரும்பவில்லை...

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா காயம் காரணமாக டெல்லி அணியில் இருந்து விலகி, நாட்டுக்குச் சென்றுவிட்டார். கேப்டன் டுபிளிசிஸ், சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், குயிண்டன் டி காக் மும்பை அணியிலும் கிறிஸ் மோரிஸ் டெல்லி அணியிலும் இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல் இறுதிப் போட்டி ஞாயிற்றுக் கிழமை நடப்பதால், கிறிஸ் மோரிஸ் தவிர மற்றவர்கள் நாடு திரும்பவில்லை.

கிப்சன் வருத்தம்...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சிகள் தென்னாப்பிரிக்காவில் நாளை தொடங்குகிறது. முக்கியமான வீரர்கள் இன்னும் நாட்டுக் குத் திரும்பாததால் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் வருத்தம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து, தென்னாப்பிரிக்க வீரர்களை மே மாதத்துக்குள் விடுவிக்க வேண்டும் என்று அவர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அதை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை என்ற தகவல் இப்போது தெரியவந்துள்ளது.

பயிற்சி ஆட்டம்...

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம், ஐபிஎல் முடியும்வரை தங்கள் நாட்டு வீரர்கள் அதில் பங்கேற்பார்கள் என்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வரும் ஞாயிற்றுக்கிழமை, தென்னாப்பிரிக்க உலகக் கோப்பை அணி, பயிற்சியை தொடங்குகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து