ஆப்கனில் பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019      உலகம்
Afghanistan Female  journalist shot dead 2019 05 12 0

காபூல், ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் மீனா மங்கள் என்ற பெண்மணி. பத்திரிகையாளரான இவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். இந்நிலையில், மீனா மங்கள் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இவரது உடலை கைப்பற்றி, படுகொலை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த வருட தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 9 பேர் ஒரே நாளில் பலியானதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து